Freedom Fighters : தற்காப்புக்கலையின் முக்கியத்துவத்தை உணர்த்திய விடுதலை போராட்ட வீரர்... யார் இவர்.?!
Freedom Fighter duraiyanar History in tamil
துரையனார்:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகியை பற்றிய சிறிய தொகுப்பு..!!
பிறப்பு :
துரையனார் 1891ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள திரான்சுவால் என்ற இடத்தில் உள்ள ரூடிபோர்டு என்ற ஊரில் வெங்கடாசலம், செல்லத்தாச்சி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
கல்வி :
துரையனார் தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுது கத்திச்சண்டை, குத்துச்சண்டை, மல்லுச்சண்டை, சிலம்பச்சண்டை முதலிய தற்காப்புக்கலைகளை பயின்றார். சென்னையில் மறைமலை அடிகளாரிடம் நன்கு தமிழ் கற்றார்.
திருமண வாழ்க்கை :
துரையனார் துளவம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
விடுதலை போராட்டத்தில் துரையனாரின் பங்கு :
தென்னாப்பிரிக்காவில் சட்டமறுப்பு போராட்ட கூட்டத்தில் காந்தியடிகளின் வீர உரை துரையனாரை ஈர்த்தது. இதனால் துரையனார், காந்தியடிகள் நடத்திய அமைதிவழி சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு 1909ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சோகன்சுபர்க் சிறையில் அடைக்கப்பட்டார்.
துரையனார் தமிழ் படிக்க தம் தாயாருடன் தமிழ்நாடு வந்தார். கும்பகோணம் அருகில் இருக்கும் சுவாமிமலையில் தங்கியிருந்த பொழுது கும்பகோணம் பகுதியில் நடந்த பல்வேறு இந்திய விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டார். பல போராட்டங்களில் கலந்துகொண்டு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
1930ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த உப்புச்சத்தியாக்கிரகத் திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். 100 பேர் கொண்ட ஒரு குழுவுக்குத் தலைமையேற்று வேதாரண்யத்தில் போராட்டம் நடத்தியபொழுது கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பெற்றார்.
துரையனார் 1936ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 1939ஆம் ஆண்டு குடந்தை நகரமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களுக்காக நல்ல திட்டங்களை வகுத்தார்.
துரையனாரின் மறைவு :
தற்காப்புக்கலையின் முக்கியத்துவத்தை உணர்த்திய துரையனார் 1973ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் தேதி மறைந்தார்.
English Summary
Freedom Fighter duraiyanar History in tamil