கரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் –இனி கண்டிப்பா குடிங்க!
Health benefits of drinking sugarcane juice definitely drink it now
கோடைக்காலத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தை எதிர்கொள்வது பொதுமக்களுக்கு பெரிய சவாலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், பலரும் குளிர்பானங்களை தேடி ஓடுகிறார்கள். ஆனால் சாமான்யமாகக் கிடைக்கும் பாட்டில் பானங்கள் உடலுக்கு நன்மையை விட தீங்கையே அதிகம் செய்யும். இதற்கு மாற்றாக, இயற்கையாகக் கிடைக்கும் கரும்புச்சாறு சிறந்த தேர்வாக இருக்கிறது.
கரும்புச்சாறு, சுவை மட்டுமின்றி பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
கோடையில் கரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
-
உடலுக்கு ஆற்றல் தரும்: வெயில் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வை தானாகவே குறைக்கும். உடலில் நீர்சத்து சரியாக பராமரிக்கப்படும்.
-
ரத்த சோகையை குறைக்கும்: இதில் உள்ள இரும்புச் சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
-
செரிமானத்திற்கு உதவும்: இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்.
-
மஞ்சள் காமாலை பாதிப்புக்கு நிவாரணம்: ஆயுர்வேதத்தில் இது சிறந்த இயற்கை மருந்தாக கருதப்படுகிறது.
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: கரும்புச்சாற்றில் இயற்கையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளதால், நோய்களைத் தடுக்கும் சக்தி பெற முடிகிறது.
-
கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகக்கும்: உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் தன்மை இதற்குண்டு.
-
எலும்பு வலிமை அதிகரிக்கும்: இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகின்றன.
குறிப்பு: கரும்புச்சாறு பல நன்மைகளை வழங்கினாலும், சர்க்கரை நோயாளிகள் மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்ற பிறகே இதை அருந்துவது நல்லது.
இந்நிலையில், கோடையில் இயற்கையான, சத்தான மற்றும் பாதுகாப்பான குளிர்பானமாக கரும்புச்சாறு ஒரு சிறந்த விருப்பமாக வலியுறுத்தப்படுகிறது.
English Summary
Health benefits of drinking sugarcane juice definitely drink it now