திருநெல்வேலி ஸ்பெஷல் தேங்காய் திரட்டு பால் இப்படி செஞ்சு பாருங்க!
Home made thirunelveli special Thengaai thirattu paal
பாசிப்பருப்பு - 3 டீ ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
ஏலக்காய் - 3
துருவிய வெல்லம் - 1 1/4 கப்
நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் பாசிப்பருப்பை அரைத்துக் தெடுத்தப்பின் துருவிய தேங்காய் மற்று ஏலக்காய் சேர்த்து தண்ணீர் கொஞ்சமாக சுன்னத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து மிக்ஸியில் அரைத்த விழுதுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கைவிடாமல் கெட்டி பதம் வரும் வரை விடாமல் கிளறிவிடவும்.
அதன் பின் அவற்றில் துருவிய வெல்லம் அல்லது வெல்ல பாகை சேர்த்து கைவிடாமல் இரண்டும் கலந்து போகும் வரை கிளறிவிட்டப் பின் நெய் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஒரு ப்ளேட்டில் நெய் தடவி வைத்துவிட்டு அதனுள் இதைச் சேர்த்து ஆறினப்பின் விருப்பமான வடிவங்களில் துண்டு போட்டு கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் ஸ்வீட் டை விட மிக சுவையாக இருக்கும்.
English Summary
Home made thirunelveli special Thengaai thirattu paal