முட்டைகோஸ் போண்டா செய்வது எப்படி? - வாங்க பார்க்கலாம்.!! - Seithipunal
Seithipunal


முட்டைகோஸ் போண்டா செய்வது எப்படி? - வாங்க பார்க்கலாம்.!!

நாம் அனைவரும், வெங்காய போண்டா, முட்டை போண்டா என்றுதான் சாப்பிட்டுள்ளோம். ஆனால், புது விதமாக முட்டைகோஸ் வைத்து போண்டா செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையானவை:-

துருவிய முட்டைகோஸ், தோல் சீவிய உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய பெரிய வெங்காயம், கடலை மாவு, அரிசிமாவு, உப்பு, தண்ணீர், தேங்காய் துருவல், எண்ணெய்

செய்முறை:

முதலில் துருவிய முட்டைகோஸ், தோல் சீவிய உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், ஒருகைப்பிடி கருவேப்பிலை, கொத்தமல்லி, பெரிய வெங்காயம் இவையனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு இவை அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இந்த மாவை பக்கோடா போடும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதையடுத்து இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.

இதைத்தொடர்ந்து அடுப்பை பற்ற வைத்து அதில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் உருட்டி வைத்த போண்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் எடுத்து கொள்ளவும். இந்த முட்டைகோஸ் போண்டாவை தக்காளி அல்லது பச்சை மிளகாய் சாஸ், வெங்காயச் சட்னி சேர்த்து சாப்பிடலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make cabbage bonda


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->