இதுல கூட இட்லி செய்யலாமா?! சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த இட்லி!!
how to prepare elaneer idly
இன்றளவில் இருக்கும் குழந்தைகள் அதிகளவில் விதவிதமான உணவுப்பொருட்களை விரும்புகின்றனர்.
வெரைட்டியான மற்றும் புதுமையான உணவுகளை விரும்பும் குழந்தைகளுக்கு இட்லி என்று வழங்காமல் இளநீர் இட்லியை வழங்கினால் அவர்கள் அமைதியாக அனைத்து இட்லிகளையும் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள்.
இளநீர் இட்லி செய்வது பற்றி இனி காண்போம்.
இளநீர் இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 கிலோ.,
உளுந்து - 3/4 கிலோ.
இளநீர் - 400 மி.லி
இளநீர் இட்லி செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும்.
இட்லி மாவிற்கு தண்ணீர் ஊற்றி அரைப்பதற்கு பதிலாக இளநீரை ஊற்றி அரைக்க வேண்டும்.
பின்னர் மாவை கலந்து அதனுடன் சிறிது இளநீரை ஊற்றி கொள்ளவேண்டும்.
இட்லி தயார் செய்யும் போது இட்லி மாவில் இருக்கும் இளநீரின் மூலமாக சுவையான இளநீர் இட்லியானது நமக்கு கிடைக்கும். இந்த இளநீர் இட்லிக்கு தக்காளி மற்றும் தேங்காய் கார வகை சட்னியை வைத்து சாப்பிடும் போது சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
English Summary
how to prepare elaneer idly