பிரசவ தழும்புகளை எப்படி மறைக்கலாம்?
how to remove delivery scras
பிரசவித்த பெண்களுக்கு அடிவயிற்றில் தழும்புகள் உருவாகிறது. இதை தடுப்பதற்கான மற்றும் எளிதில் மறைவதற்கான மருத்துவ முறையை இந்தப் பதிவில் காண்போம்.
பாதாம் எண்ணெய்
சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய்யை ஒன்றாக கலக்கி தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்த பிறகு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் தழும்புகள் மெல்ல மெல்ல மறையும். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை, குளித்த பின்னர் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தழும்புகள் மறையும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து பின்னர் தண்ணீரால் கழுவினால் தழும்புகள் மறையும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் பிரசவ தழும்புகள் மற்றும் தசை விரிவு கோடுகளை நீக்கும் தன்மை கொண்டது. இதை தழும்புகள் உள்ள அடிவயிறு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் தடவி வந்தால் எளிதில் மறையும்.
English Summary
how to remove delivery scras