தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் நியூசிலாந்து; சாம்பியன்ஸ்ஷிப் கோப்பை யாருக்கு..?
New Zealand will defeat South Africa and face India in the final match
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இன்று லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் 02-வது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்தவகையில், நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் எடுத்தது. அணியின் தரப்பில் அபாரமாகி ஆடிய ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், வில்லியம்சன் 102 ரன்களும் எடுத்து சதம் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா அணியின் லுங்கி என்கிடி 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

363 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு, இறுதிப்போட்டி கனவோடு களமிறங்கிய, தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ரிக்கெல்டன் மற்றும் தெம்பா பவுமா களம் இறங்கினர். இதில் ரிக்கெல்டன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக பவுமாவுடன் கை கோர்தத்தர் வான் டெர் டுசென், இருவரும் அடித்து ஆடி, அரைசதம் எடுத்தனர். பவுமா 56 ரன்களிலும், வான் டெர் டுசென் 69 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனையடுத்து களம் இறங்கிய மார்க்ரம் 31 ரன்கள், கிளாசென் 03 ரன்கள், வியான் முல்டர் 08 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் - மார்கோ ஜான்சென் ஜோடி சேர்ந்தனர். இதில் ஜான்சென் 03 ரன்களிலும், அடுத்து வந்த மஹராஜ் 001 ரன்களிலும், ரபடா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் மில்லர் 67 பந்துகளில் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர் 03 விக்கெட்டுகளும், ஹென்றி மற்றும் பிலிப்ஸ் தலா 02 விக்கெட்டுகளும், ரவீந்திரா மற்றும் பிரேஸ்வெல் தலா 01 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி, 09 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்காரணமாக நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் ஞாயிற்று கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து நியூசிலாந்து அணி பல பரீட்சை நடத்தவுள்ளது.
English Summary
New Zealand will defeat South Africa and face India in the final match