இரவில் இப்படி செய்தால் காலையில் சீக்கிரமா எழுந்துக்கலாம்.. இன்றே ட்ரை பன்னுங்க.!  - Seithipunal
Seithipunal


ஒரு மனிதனுக்கு இரவில் உறக்கம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் காலையில் சீக்கிரம் எழுவதும்  உடல் நலத்திற்கு நன்மை பயக்கின்ற  ஒன்றாகும்.

ஒரு மனிதன் இரவு நேரம் உறங்கி  காலையில் சூரியன் உதிக்கும் முன் எழுவது  நம் உடலில் நேர்மறையான சக்தியை அதிகரிப்பதோடு  மனதிற்கு உற்சாகத்தையும் கொடுக்கின்ற ஒரு செயலாகும். 

ஆகையால்  எவ்வாறு காலையில் சீக்கிரம் எழுவது என்பது பற்றி  நாம் காணலாம்

நாம் உறங்கச் செல்லும் நேரத்தை  சீக்கிரமாக அமைத்துக் கொள்வதன் மூலம் காலையில்  விரைவாக எழும்ப முடியும். இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் கிடைக்குமாறு  நமது நேரத்தை கணக்கிட்டு உறங்கும் நேரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். 

நமது  உடலை  அந்த நேரத்திற்கு எழும்ப பழகிக் கொள்ள உதவியாக இருக்கும்.

மடிக்கணினி மற்றும்  செல்போன் போன்றவற்றிலிருந்து  உறங்கச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்  நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். இதனால், அவற்றால் ஏற்படும் கவனச் சிதறல்  சரி செய்யப்படுவதோடு நம்மால் ஒருமுகமாக  நம்முடைய தூக்கத்தில் கவனத்தை செலுத்த முடியும்.

உறங்கச் செல்வதற்கு முன்  செரிமானத்திற்கு  தாமதமாக கூடிய  நொறுக்குத் தீனிகளை  எடுத்துக் கொள்வதன் மூலம்  நமது அமைதியான உறக்கத்திற்கு  தொந்தரவு ஏற்படுகிறது. 

இதனால் உறங்கச் செல்வதற்கு முன்பாக  நொறுக்கு தீனிகளை  தவிர்த்துக் கொள்ள வேண்டும் . அப்படியே  பசி எடுத்தாலும்  ஒரு கப் தயிர் அல்லது  இளம் சூடான பாலை குடிப்பதன் மூலம்  நமது உறக்கத்திற்கு உதவி புரியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To wake up early morning tips


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->