கொசுவை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருகிறது... எறும்பை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருவதில்லை. ஏன்?
kosu blood not in red color
கொசுவை அடித்தாலும் எறும்பை அடித்தாலும் சிவப்பாக ரத்தம் வராது. பூச்சிகளில் இருக்கும் உயிர்திரவத்துக்கு 'குருதிநிணம்" என்று பெயர். இதில் பல்வேறு சத்துக்களும், ஹார்மோன்களும் மற்றும் சில பொருட்களும் இருக்கின்றன.
இந்த திரவத்தில் சிவப்பணுக்களோ, ஹீமோகுளோபினோ கிடையாது. இதனால் நம் ரத்தத்தைப்போல் அது சிவப்பாக இருக்காது. சில நேரத்தில் பூச்சிகளின் ரத்தம் வெளிர் மஞ்சளாகவும், வெளிர் பச்சையாகவும் தெரியும்.
பூச்சிகள் அப்போது எந்தத் தாவர உணவைச் சாப்பிட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த நிறம் உண்டாகும். மற்றபடி பூச்சிகளின் ரத்தத்துக்கு நிறமில்லை.
கொசு உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பிறகு, நீங்கள் அடித்திருப்பீர்கள். அதனால் சிவப்பாக ரத்தம் இருந்திருக்கிறது.
English Summary
kosu blood not in red color