தலை முதல் கால் வரை - பல நோய்களைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை.!
manathakkali keerai benefits
கீரை வகைகளில் ஒன்றான மணத்தக்காளி கீரை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- * மணத்தக்காளி கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண், குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது, வாயு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக உள்ளது.
* இந்தக் கீரையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை வாரத்திற்கு இரண்டு முறை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் அல்சர், வயிற்றுப்புண் உள்ளிட்ட பிரச்சினைகளை எளிதாக குணப்படுத்தலாம்.
![](https://img.seithipunal.com/media/manathakkali-868ys.png)
* காச நோய், மூச்சு கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இந்த மணத்தக்காளி கீரை உள்ளது. அதிலும் குறிப்பாக உடலில் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள், சிறுநீரக செயல் இழப்பு போன்ற உயிரை பாதிக்கும் நோயிலிருந்தும் நம்மை பாதுகாத்து வருகிறது.
* தூக்கமின்மை பிரச்சனைக்கு முக்கிய மருந்தாக இருந்து வரும் மணத்தக்காளி கீரை சரும வறட்சி உள்ளிட்ட தோல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்டவற்றிற்கும் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
English Summary
manathakkali keerai benefits