எளிமையான முறையில்... சரும அழகை கூட்டும் ''முலாம்பழம்''!
musk melon skin beauty benefits
* முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து வைட்டமின்கள் நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி இயற்கை ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
* கோடை காலங்களில் முலாம் பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. முலாம்பழம் செல்களை பாதுகாக்கிறது. இதனை சாப்பிடுவதால் சருமம் வறட்சியாகவோ சொரசொரப்பாகவோ இருக்காது.
* முலாம்பழத்தை சாப்பிட்டாலும் நமது உடலுக்கு அழகு கிடைக்கும். அத்துடன் முலாம் பழத்தை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து பின்னர் கழுவினால் முகம் அழகு பெறும்.
* முலாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி அரைத்து அதில் தேன், மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பளிச்சென்று முகம் மாறும்.
* முலாம் பழ ஜூஸில் எலுமிச்சை சாறு, கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து சிறிது நேரம் மசாஜ் செய்து நீரினால் கழுவினால் முகத்தில் எண்ணெய் வடிதல் நின்று பருக்கள் உண்டாவது குறையும்.
English Summary
musk melon skin beauty benefits