பனை மரத்தை வீடுகளில் வளர்க்கலாமா?! என்ன சொல்கிறது விருட்ச சாஸ்திரம்.! - Seithipunal
Seithipunal


வீட்டில் பனை மரத்தை வளர்க்கலாமா? 

பனை புல்லினத்தை சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் ஆகும். பனைகள் பொதுவாக பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. இது வறட்சியான நிலப்பரப்பிலும் வளரக்கூடியது. இந்த மரம் 30 முதல் 40 அடி உயரம் வரை வளரும்.

பனை மரம் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், காங்கோ போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் உள்ளது.

பனையில் ஆண் பனை, பெண் பனை என இருவகை உண்டு. ஆண் பனையில் பூ மட்டுமே பூக்கும், பெண் பனையில் பூ, காய் என இரண்டும் காய்க்கும்.

பனை மரத்தில் இருக்கும் நொங்கு, பனம் பழம், பனங் கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனை பால் என ஒவ்வொரு பகுதியும் அற்புத பலன்களை தரக்கூடியது. அதனால் இது கற்பகத்தரு என்று அழைக்கப்படுகிறது. மேலும் பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும். 

பனைமரத்தில் இருந்து பனங்கிழங்கு, நுங்கு, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர் போன்ற உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன.

இதனுடைய இலைகள் விசிறி செய்வதற்கும், கூரை, பாய் மற்றும் பனை மர வீடு கட்டுவதற்கும் பயன்படுகிறது.

இப்பொழுது நாம் எழுதுவதற்கு காகிதம் பயன்பட்டு வருகிறது. பழைய காலத்தில் பனை ஓலை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த பனை ஓலை 100 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும்.

கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும் மற்றும் சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது.

பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருட்கள் எளிதில் கெட்டுப் போவதில்லை. இன்றும் கூட சில கிராமப்புறங்களில் உணவுகளைப் பனை ஓலையில்தான் கொடுப்பார்கள்.

முளைத்து கிழங்கு விட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்சத்துக்களும், தாதுப்பொருட்களும் உள்ளன. 

இது போன்று பனை மரத்தின் பயன்கள் எண்ணற்றவை. இது பண்டைய காலத்தில் மட்டுமின்றி இப்பொழுதும் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.

ஏன் வயல்களிலும், தோட்டங்களிலும் வளர்க்க வேண்டும்?

 பனை மரம் மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும், குளங்களிலும், கால்வாய்களிலும், ஆற்றுப்படுகைகளிலும், கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்க வயல்களிலும், தோட்டங்களிலும் நட்டனர்.

எங்கு வளர்க்கலாம்?

வீட்டிற்கு உள்ளேயும், வீட்டைச் சுற்றியும் பனை மரத்தை வளர்க்காமல் இருப்பது நல்லது. 

இதற்கு காரணம் என்னவென்றால்... வாஸ்து சாஸ்திரத்தின் படி, பனை மரங்களை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது. வீட்டில் பனை மரம் வளர்வதை தவிர்த்தால் வறுமை வராது. மேலும், இந்த பனை மரத்தை வளர்க்கும் மக்கள் நிதி சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர். இது ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வீட்டை சுற்றி இந்த மரத்தை நடாதீர்கள்.

எந்த திசையில் வளர்க்கலாம்? 

பனை மரங்களை உங்கள் தோட்டத்தில் தெற்கு அல்லது மேற்கு திசையில் வளர்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panai maram veetil valarkalama


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->