மாதவிடாய் காலங்களில் மறந்தும் இது போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள்.! - Seithipunal
Seithipunal


மாதவிடாய் காலங்களில் அதிக அளவில் உப்பு சேர்த்த உணவை தவிர்க்க வேண்டும். சோடியம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். இதனால் மாதவிடாய் காலங்களில் வயிற்று மந்தம், பசியின்மை தவிர்க்கலாம். 

மைதா சேர்த்து தயாரிக்கப்படும் பாஸ்தா, பீட்சா, பிரட், பிஸ்கட், பரோட்டா போன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது மலச்சிக்கல், வாய்வு தொல்லை, அஜீரணம், ரத்தத்தில் சர்க்கரை சமநிலை இன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மாதவிடாய் காலங்களில் சர்க்கரை நிறைந்த உணவு பொருட்கள் சாப்பிட ஆசை வரும். ஆனால் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும். இதனால் பதட்டம், திடீரென மன அமைதி, வயிற்று இறுக்கம் போன்றவை நீங்கும். 

எண்ணெயில் பொறிக்கப்பட்ட பஜ்ஜி, போண்டா, பக்கோடா போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இதனை உட்கொள்வதால் வயிறுவலி, முதுகு வலி, வயிறு மந்தம் போன்றவை ஏற்படும். 

பால், இறைச்சி போன்ற கால்சியம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் மார்பக வலி, உடல் அசதி, தலைவலி ஏற்படும். அதேபோல் அதிக அளவில் காபி, டீ குடிக்க கூடாது. இதற்கு பதில் பிளாக்  டீ, பிளாக் காபி அருந்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periods time women avoid food


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->