ட்ரைன்ல 'டூர்' போகப் போறீங்களா.? ரயில்வே ஜங்சன், ஸ்டேசன், டெர்மினல் இதுக்கெல்லாம் அர்த்தம் என்னன்னு தெரிஞ்சிட்டு போகலாமே.!
Railway stations and reasons for their names
நாம் அனைவரும் ரயில் பயணங்களை மேற்கொண்டிருப்போம். நாம் இறங்கும் ரயில்வே ஸ்டேஷன்களில் சென்ட்ரல் அல்லது ஜங்ஷன் அல்லது டெர்மினஸ் என்பது போன்ற பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
உதாரணமாக சென்னை சென்ட்ரல் திருச்சி ஜங்ஷன் இன்றைய பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன என்று நாம் பார்க்கலாம்.
ஒரு நகரில் பல ரயில்வே நிலையங்கள் இருந்தாலும் அந்த நகரின் அதிகமான ரயில்வே போக்குவரத்துடன் கூடிய பெரிய ரயில்வே நிலையங்களை தான் சென்ட்ரல் என்று அழைப்பார்கள். இந்த ரயில் நிலையங்கள் அதிகமான ரயில்வே போக்குவரத்துகளை மேற்கொள்ளும். மேலும் பழமையான ரயில் நிலையங்களாகவும் இருக்கும். இந்தியாவில் சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் சென்ட்ரல் மும்பை சென்ட்ரல் மங்களூர் சென்ட்ரல் மற்றும் கான்பூர் சென்றல் என ஐந்து பழமையான ரயில் நிலையங்கள் இருக்கின்றன.
ஜங்ஷன் என்று அழைக்கப்படுபவை மூன்று வெவ்வேறு ரயில்வே வழித்தடங்கள் ரயில் நிலையங்களுக்குள் வருவதற்கும் வெளியே செல்வதற்கும் இருக்கும். இதற்கு உதாரணமாக திருச்சிராப்பள்ளி ஜங்ஷன், திருநெல்வேலி ஜங்ஷன் கோயம்புத்தூர் ஜங்ஷன் மற்றும் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
டெர்மினஸ் அல்லது டெர்மினல் என்று அழைக்கப்படும் ரயில்வே நிலையங்களில் அந்த ரயில் நிலையத்துடன் வழித்தடமானது முடிவடையும். இந்த ரயில் நிலையங்களுக்கு ரயில்கள் ஒரே வழியாகத்தான் வரவேண்டும் ஒரே பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதற்கு உதாரணமாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், பீகார் டெர்மினஸ் மற்றும் பந்திரா டெர்மினஸ் ஆகிய ரயில் நிலையங்களை குறிப்பிடலாம்.
English Summary
Railway stations and reasons for their names