மன அமைதி இல்லாமல் இருக்கீங்களா? இதான் காரணம்.!
reason of mind peace
தற்போதைய காலத்தில் பொதுமக்கள் தானாகவே மன அமைதியைக் கெடுத்துக்கொள்கின்றனர். தாங்கள் செய்யும் சில செயல்களால் இது ஏற்படுகிறது. அது என்னென்ன என்று இந்தப் பதிவில் காண்போம்.
1. மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை அதிகளவில் செலவிடுகின்றனர். இது அவர்களின் மனஅமைதியைக் கெடுகிறது. அதுமட்டுமல்லாமல், எதிர்மறை செய்திகளை பார்த்தீர்கள் என்றால், அது உங்களின் மனஅமைதியைக் கெடுக்கும்.
2. மனஉணர்வுகளை வெளிப்படுத்தாமல், அவற்றை தேக்கி வைப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் உணர்வு ரீதியாக சிக்கிக்கொள்கிறீர்கள். ஆகவே இதுவும் உங்கள் மனஅமைதியின்மைக்கு காரணமாகிறது.
3. அதிகளவில் பிறருக்காக யோசிப்பது, உங்களை பல்வேறு பிரச்சனைகளுக்கு அழைத்துச்செல்லும். அது உங்களுக்கு பயம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும். உங்களை வெளிப்படுத்துவதை தடுத்தால் உங்கள் மனஅமைதியைக் கெடுக்கும்.
4. எவ்வித அக்கறையும் இல்லாமல் ஷாப்பிங் செய்வது, சாப்பிடுவது மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உங்களை குற்றவுணர்வுக்கும், திருப்தியின்மைக்கும் அழைத்துச் செல்லும். இதனால் நீங்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக வேண்டும்.
5. கடந்த காலத்தை எண்ணி வருந்துவது, கடந்த கால சிந்தனைகளிலே மூழ்கிக்கிடப்பது, எதிர்காலத்தைக் குறித்து கற்பனை செய்துகொண்டிருப்பது, உங்களின் நிகழ்கால அனுபவங்களை தவிர்ப்பது என்று இருந்தால், உங்களால் மகிழ்ந்திருக்க முடியாது. மனஅமைதி கெடும்.
6. தோல்வி பயத்தில் புதிய விஷயங்களை தேர்ந்தெடுக்காமல் இருப்பது, புதிய சவால்களை எதிர்கொள்ள தயங்குவது என்று உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை சிதைக்கும் ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள தயங்குவது உங்களை சிக்கலில் மாட்டிவிடும். இது மனஅமைதியைக் கெடுக்கும்.