மூட்டு வலியைப் போக்க எளிய வழிமுறைகள்.. வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
Solution of knee pain
மூட்டு வலி ஏற்பட காரணமாக இருப்பது காலை கடன் கழிக்கும் முறையே என மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அதனால் தான் நமது நாட்டில் கால் மூட்டிலும், வெளிநாட்டில் இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமாக அதிக பளு தூக்குவதால் மூட்டின் உள்பகுதியில் ஏற்படும் மாற்றம் முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்புகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய் தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணங்களாக இருக்கிறது.
அதன்படி இந்த வகை மூட்டு வலிகளை எப்படி எளிதாக வீட்டில் இருந்தபடியே சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
நல்ல தூய்மையான உருளைக்கிழங்கு ஒன்றை சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்க வேண்டும். இந்த நீர் மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை, ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் மூட்டு வலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
சிறிதளவு எலுமிச்சை பழச்சாற்றை, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து தினமும் இருமுறை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் மூட்டு வலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்றாக கலக்கி அதனை மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டு வலிக்கு உடனடி தீர்வளிக்கிறது.