உங்க வீட்ல தங்கம் அள்ள, அள்ள குறையாமல் இருக்கணுமா..?! அப்போ 'இந்த' இடத்தில் வெச்சுப் பாருங்க..!!
Some Tips For Keeping Gold At Your Home
ஒவ்வொரு பொருளையும் வீட்டில் எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பு உள்ளது. அவற்றை பின்பற்றினால் வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். முக்கியமாக தங்கத்தை வீட்டிற்குள் எந்த இடத்தில் வைத்தால் நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கத்தை வாங்குவது மிக நல்ல பலன்களை கொடுக்கும் என்பதோடு, அப்படி வாங்கிய தங்கத்தை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் நன்மைகளும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.
அதன்படி தங்க நகைகள் வாங்கினால் அவற்றை வீட்டின் தென்மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். மேலும் வட மேற்கு மூலையில் தங்கம் வைக்க கூடாது. தென்மேற்கு திசையில் தங்க நகைகளை வைத்தால் மேலும், மேலும் தங்கம் வாங்கும் யோகம் ஏற்படும்.
மேலும் தங்கம் வைத்திருக்கும் அறையின் நிறமும் மஞ்சள் நிறத்தில் தான் இருக்க வேண்டும். அப்போது தான் செல்வத்திற்கு அதிபதியான குபேரர் மேலும் தங்கத்தை பெருகச் செய்வார். மேலும் தங்க நகைகள் வைக்கும் அலமாரியை வடக்கு திசை நோக்கியே கதவு திறந்திருக்கும்படி அமைக்க வேண்டும்.
மேலும் நீங்கள் தங்கத்தை வைக்கும் அலமாரி அல்லது லாக்கரில் ஒரு கண்ணாடியை கண்டிப்பாக வைக்க வேண்டும். இதன்மூலம் செல்வம் மற்றும் அதிர்ஷ்டங்கள் மேலும் ஈர்க்கப் படும். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் தங்கத்தை வைத்திருக்கும் லாக்கர் அல்லது அலமாரியின் கதவு ஒருபோதும் குளியலறையை நோக்கி திறந்திருக்கும் படி அமைக்க கூடாது.
English Summary
Some Tips For Keeping Gold At Your Home