பொங்கல் ஸ்பெஷல் ஸ்வீட் கார்ன் பாயாசம் செஞ்சு பாருங்க! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

உதிர்த்த ஸ்வீட் கார்ன் - 300 கிராம்
பால் - 1 லிட்டர்
சாரா பருப்பு - 20 கிராம்
மில்க் மெய்ட் - 1 சின்ன டின்
ஏலக்காய் தூள்- 1/2 டீஸ்பூன்
முந்திரி  - 20 
உலர் திராட்சை - தேவைக்கேற்ப
நெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் உதிர்த்து எடுத்த 300 கிராம் ஸ்வீட் கார்னனை கொதிக்கு நீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஆறவைத்து கொற கொறப்பாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் எடுத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து பால் காய்ச்சியதும் அரைத்து வைத்த ஸ்வீட் கார்னை சேர்த்து 8 - 10 நிமிடம் வரை கை விடாமல் கிளறி விடவும். 

10 நிமிடம் கழித்து ஆடை படர்ந்தப்பின் அடுப்பை அணைத்து விட்டு மில்க் மெய்டு சேர்த்து நன்றாக கிளறி கலந்துக் கொள்ளவும். அதன் பின் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

அதன் பின் அடுப்பில் கடாய் வைத்து 1 டேபில் ஸ்பூன் நெய் சேர்த்து சாரா பருப்பு சேர்த்து 2 நிமிடத்தில் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின் திரும்ப ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

வருத்து எடுத்தசாரா பருப்பு, முந்திரி பருப்பு, உலர்திராட்சை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கலந்துக் கொண்டால். சூப்பரான ஸ்வீட் கார்ன் பாயாசம் ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sweet Corn payasam special preparation in Tamil


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->