சுவையான ஃபிஷ் கட்லட்.! சூப்பராக செய்வது எப்படி.?!
tasty fish cutlut special recipe
தேவையான பொருட்கள் :
மீன் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 5
புதினா - 1 கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 3
உருளைக்கிழங்கு - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
ப்ரெட் - 2 துண்டு
செய்முறை :
மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். வேக வைத்த பின் மீனின் முள்ளை நீக்கிவிட்டு அதை உதிர்த்து வைத்து கொள்ளுங்கள். ப்ரெடை தூளாக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் ஆறிய பின் வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலா போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
உதிர்த்த மீனுடன் அரைத்த மசாலா மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது கெட்டியான பதத்திற்கு கரைத்து வைக்கவும். ப்ரெட் தூளை ஒரு தட்டில் பரவலாக போட்டு கொள்ளுங்கள். பிசைந்து வைத்த மீன் கலவையை வடையை போல் தட்டி முதலில் மைதா கரைசலில் போட்டு, பின் ப்ரெட் தூளில் பிரட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் எண்ணெயில் போட்டுப் சிவக்க பொரித்து எடுக்கவும். அல்லது தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும்.
English Summary
tasty fish cutlut special recipe