விடை பெறுகிறேன்! நல்லநாள் அதுவுமா அதிமுகவை அதிரவைத்த தலைவர்!
AIADMK IT Wing Leader Kovai Sathyan Leave in social media
அதிமுகவின் ஐடி விங்க் தலைவர் கோவை சத்யன் சிறிது காலம் சமூக வலைதள பக்கத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவுத்திருப்பது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் வரை அதிமுகவின் ஐடி விங்க் தலைவராக சிங்கை.ராமச்சந்திரன் பொறுப்பு வகித்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
இவர் மீது அதிமுகவினரே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் சரிவர செயல்படவில்லை என்றும், கட்சியின் தலைவர் அறிக்கை விட்டால் கூட அதனை அப்டேட் செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், அதிமுகவின் புதிய ஐடி விங்க் தலைவராக கோவை சத்தியனை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
பதவியேற்ற உடனேயே அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை கையில் எடுத்த கோவை சத்யன், மிகச் சிறப்பாக கையாண்டு மக்கள் மத்தியில் அதனை கொண்டு சேர்த்ததுடன், ஆட்சியாளர்களையும் அதிர வைத்தார் என்று சொன்னால் மிகை ஆகாது.
இந்நிலையில், கோவை சத்யன் இன்னும் சில மாதங்கள் ட்விட்ட,ர் இன்ஸ்டா, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்திருப்பது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
AIADMK IT Wing Leader Kovai Sathyan Leave in social media