பொங்கல் சிறப்பு பேருந்துகளின் மூலம் 8,72 மக்கள் சொந்த ஊருக்கு பயணம்! - Seithipunal
Seithipunal


பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் மூலம் இதுவரை 8,72,630 பயணிகள் பயணித்து உள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல்  திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (13.01.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் 14.01.2025 அதிகாலை 02.00 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 2,311 சிறப்புப் பேருந்துகளும் ஆக 4,403 பேருந்துகளில் 2,42,715 பயணிகள் பயணம் செய்தனர்.

கடந்த 10.01.2025 முதல் 14.01.2025 அதிகாலை 02.00 மணி வரை 15,866 பேருந்துகளில் 8,72,630 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 3,21,645 பயணிகள் முன்பதிவு செய்து உள்ளனர்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal TamilNadu TNGovt Transport Department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->