வெண்டைக்காய் பொறியலை இப்படி செய்து பாருங்கள்.. அதுக்கப்புறம் விடவே மாட்டிங்க..!
Tasty way to cook ladyfingers Frie
வெண்டைக்காய் சிறுவர் மற்றும் சிறுமியர் இருவருக்கும் மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இது பெண்களுக்கு உடலுறவின் போது வலியை குறைக்க உதவுகிறது. வெண்டைக்காய் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவினில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ,
கொத்தமல்லி - 1 ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 5,
பொட்டுக்கடலை - 5 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - ஒரு ஸ்பூன்,மிளகு, சீரகம் - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1/4 கிலோ வெண்டைக்காயை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவவும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி, பின்னர் கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். கடுகு போட்டு கடுகு வதங்கியதும் வெண்டைகாயை போட்டு இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும்.
இவை வெந்ததும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் 5 ஸ்பூன் நிலக்கடலை, 3 காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், அரை டீஸ்பூன், கொத்தமல்லி, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி, சிறிதளவு சீரகம், 5 சின்ன வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைக்கவும்.
இந்த மசாலா பவுடரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். 2 நிமிடம் வரை கிளறிய பிறகு இறக்கினால், உதிரி உதிரியான பிசுபிசுப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியல் தயாராகி விடுகிறது.
English Summary
Tasty way to cook ladyfingers Frie