திருவிழா... மயில் ஆட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் என்னென்ன? திருவிழா... மயிலாட்டம்.! - Seithipunal
Seithipunal


மயில் ஆட்டம் தமிழர்களின் பாரம்பரிய நடனக் கலையாகும். திருவிழா சமயங்களில் கரகாட்டத்தோடு சேர்ந்து இந்த மயிலாட்டத்தையும் பார்க்கலாம். மயில் வடிவில் உள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்துக்கு ஏற்றவாறு ஆடும் ஆட்டமே மயிலாட்டம் ஆகும்.

நையாண்டி மேளம் இசைக்கு ஏற்றவாறு காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடி காட்டுவர்.

கரகாட்டத்தின் துணையாட்டமாகவும், கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும் இவ்வாட்டம் ஆடப்படுகிறது.

மயிற்தோகையைப் பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளையும் மயிலாட்டம் என்று குறிப்பிடுவதுண்டு. 

மயில் ஆட்டத்தில் மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் மற்றும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர்.

மயில் கூட்டை எப்படி செய்கிறார்கள்?

பொய்க்கால் குதிரை செய்வது போலவே மயில் கூட்டையும் செய்கின்றனர். தலை, உடல், இறக்கைகள் முதலியவைகள் தனித்தனியே செய்யப்பட்டு அவற்றின் மீது மயிலைப் போல் வண்ணம் தீட்டுகின்றனர். 

மயில் தலையில் கம்பியாலான கொண்டைகளும், குவிலென்சு கண்ணாடியாலான கண்களும் அமைக்கப்படும். திறந்து மூடுவதற்கேற்ப மயிலின் வாய் தகடுகளால் அமைக்கப்பட்டு இருக்கும்.

மயில் கூட்டின் அடிப்பக்கத்தில் மயிலிறகுகள் பொருத்தப்படும். மயிலாட்ட கலைஞர் மயிலாக ஒப்பனை செய்துகொள்ளும் போது மயிலின் கூம்பு போன்ற கழுத்து பகுதியை தன் தலையில் வைத்துக் கட்டிக்கொள்வர்.

அக்கழுத்துப் பகுதியில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள நீலத்துணி கலைஞரின் கழுத்தினை மறைத்துக் கொள்ளும். மயிலின் உடல் கூட்டினைத் தோளில் சுமக்குமாறு கட்டிக்கொள்கின்றனர்.

உடல் கூட்டிலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட பச்சை வண்ண துணி ஆட்டக் கலைஞரின் கால்களை மறைத்துக் கொள்ளும். சலங்கைகள் கட்டப்பட்ட கால்கள் மட்டுமே வெளியில் தெரியும்.

இரண்டு கைகளிலும் மயிலின் இரண்டு இறக்கைகள் கட்டப்படும். மயில் நடத்தல், ஓடுதல், தலையை அசைத்தல், தோகையை விரித்தல், அகவுதல் போன்ற செயல்கள் நுட்பமாக செய்யப்படும் விதம் தனி அழகுடன் காணப்படும்.

மயில் ஆட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள்:

மயில் ஆட்டத்தில் ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறக்கை விரித்து ஆடுதல், தலையை சாய்த்து ஆடுதல், இரு புறமும் சுற்றி ஆடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக் கொண்டே ஆடுதல் என்று இப்படி பல அசைவுகளும் இந்த ஆட்டத்தில் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இவை அனைத்தும் மயில் ஆட்டத்தில் இடம் பெறக்கூடிய அசைவுகளாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvizha mayilattam special


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->