இன்று சர்வதேச வேட்டி தினம்! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டின் பண்பாட்டு உடை என்றாலே அது வேட்டி-சேலை தான்.ஆனால் நாகரிக வளர்ச்சியாலும், தொழில்நுட்ப புரட்சியாலும் வேட்டி கட்டும் வழக்கம் மங்கி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

ஒரு சாதாரண கிராமத்து விவசாயி பிறந்த தினம் தான் இந்த வேட்டி தினமாக கொண்டாடப்படுகிறது என்றால் வியப்பாக இருக்கும்.

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள  பாப்பான்குளம் எனும் சிற்றுரில் ஒரு விவசாய குடும்பத்தில் 1920 ஜனவரி 6ல் பிறந்தவர் ஏகாம்பரநாதன்."அம்பர் இராட்டை" (Ambar Charkha) எனப்படும் மரத்தாலான மேம்படுத்தப்பட்ட ஒரு நூற்புக்கதிர் இயந்திரத்தை கண்டுபிடித்து நெசவுத் தொழிலில் புரட்சியை ஏற்படுத்தியவர் இந்த ஏகாம்பரநாதன்.

அம்பர் ராட்டை என்ற கருவியை உருவாக்குபவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தரப்படும் என்று காந்தியடிகள் அப்போது அறிவித்திருந்தார்.ஆனால் ஒரு தமிழர் இந்த பரிசை பெற்றுக் கொள்வதா? நெவர் என்று கங்கணம் கட்டிக் கொண்ட சில வடமாநிலத்தவர்களால்  அவருக்கு கடைசிவரை அந்த ஒரு லட்ச ரூபாய் கிடைக்காமலே போய்விட்டது என்பது தனி சோக கதை..

 "புணமாலை ஏகாம்பரநாதன்" என பரவலாக அறியப்படும் இவர், சமூக பணிக்காக 1958 ல் பத்மஶ்ரீ விருது பெற்ற தமிழர் ஆவார்.

இவது பிறந்த தினம் தான் (ஜன.6)  வேட்டி தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வேட்டி தினம்  அறிவிக்கப்பட்டதில், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பெரிய பங்கு உண்டு.  அவர் கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த போது, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். 

அந்த கடிதத்தில், ‛ரோமானியர்களுக்கு ஆடை அனுப்பிய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். அந்த ஆடையை பெருமைபடுத்தும் விதமாக, தமிழ் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாக கொண்டாட வேண்டும்,’’ என்று அந்த கடிதத்தில் சகாயம் தெரிவித்திருந்தார். 

எந்த நாளை இதற்காக தேர்வு செய்யலாம் என்றபோது ஏகாம்பரநாதன் குறித்து ஒரு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சகாயத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து அவர் பிறந்த தினமான ஜனவரி 6 ஐ வேட்டி தினமாக அறிவித்தார் அவர்.

அதை ஏற்று பலரும், வேட்டி தினத்தை கொண்டாடத் தொடங்கினர். இந்த முன்னெடுப்பு, யுனெஸ்கோ கவனத்திற்குச் சென்றது. அவர்களுக்கு அதை அங்கீகரித்து, ஜனவரி 6 ல் சர்வதேச வேட்டி தினம் என்பதை முறைப்படி அங்கீகரித்தனர்.தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டிக்கு பின்னால் லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரம் ஒளிந்துள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today is International Dhoti Day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->