சாப்பிட்ட உடனே அவசரமா 'அந்த' இடத்திற்கு போறீங்களா.? அப்ப இது உங்களுக்குதான் - Seithipunal
Seithipunal


சிலருக்கு உணவு அருந்திய சில நேரத்திலேயே கழிவறைக்குள் செல்ல நேரிடும். இது இரிட்டபுள் பவள் சின்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் 10% மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்கு மிதமானது முதல் கடுமையான வயிற்றுப்போக்கு வரை ஏற்படலாம். ஒரு சில உணவுப் பொருட்களை சாப்பிட்ட உடனேயே  அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விடும்.

இந்த நோயை குணப்படுத்துவதற்கு என்று மருந்துகள் எதுவும் கிடையாது  நாம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் நமது வாழ்க்கை முறையில் செய்யக்கூடிய  மாற்றங்களின் மூலம் இந்நோய் கட்டுப்படுத்தலாம். அதற்கேற்றார் போல் நமது உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் இந்த நோயின்  பக்கத்தில் இருந்து விடுபடலாம்.

இந்தப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள்  நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் பழங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் காரம் மற்றும் மசாலா அதிகமாக உள்ள உணவு பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. மேலும் தயிர் வெண்ணை பால் போன்ற பொருட்களை  சாப்பிடுவதும் வயிற்றுப்போக்கு அதிகரிக்கும் என்பதால் அவற்றையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் உணவை கவனமாக தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த இயலும். ஆப்பிள், தர்பூசணி, பேரிக்காய், மாம்பழம் போன்ற  பழங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், திராட்சை, ப்ளூபெர்ரி, பீன்ஸ், ஆரஞ்சு போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இறைச்சி மற்றும் முட்டைகளையும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நாம் சாப்பிடும் பொருட்களை கவனமாக தேர்வு செய்து  சாப்பிடுவதன் மூலம் இந்த நோயின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

try these foods to avoid irritated bowl syndrome


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->