சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.!!  - Seithipunal
Seithipunal


* சைவ உணவு ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியமானதாக உள்ளது. அதனை சாப்பிடுவதால் நோய் பாதிப்பு குறையும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சைவ உணவுக்கு மாறினால் சில நாட்கள் கடினமாக இருக்கும். அசைவ உணவுகளில் கிடைக்கும் அனைத்து சத்துகளும் சைவ உணவுகளில் கிடைக்கும். 

* இரண்டு உணவுகளிலும் ஒரே மாதிரியான சத்துக்கள் கிடைக்கும். சைவ உணவு தாவர அடிப்படையில் ஆனது. அதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படாது. 

* மலச்சிக்கல், குடல் இயக்கம் போன்றவை சீராக இருக்கும். இறைச்சி உணவுகளில் கொலஸ்ட்ரால் இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்கும். 

* ஆனால் சைவ உணவில் கெட்ட கொழுப்புகள் இல்லாமல் நல்ல கொழுப்புகள் மட்டுமே உள்ளது. இதன் மூலம் உடல் எடை சீராக இருக்கும். 

* சைவ உணவை உண்பதால் இதய நோய், உயரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு. இறைச்சி சார்ந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

* பதப்படுத்த இறைச்சி போன்றவற்றை உட்கொள்ளும் பொழுது உடலில் பாதிப்புகள் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சைவ உணவை உட்கொள்ள வேண்டும். இறைச்சிகளை விட சைவ உணவுகளில் குறைந்த கலோரிகள் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vegetarian food medicinal benefit


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->