சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் வேம்பு.. டீ- யின் நன்மைகள்.!
Vembu Tea benefit
வேப்பிலை 'ஒரு சர்வரோக நிவாரணி' என்று பண்டைய காலத்திலிருந்தே அழைக்கப்படுகிறது.
வேப்பிலையானது சிறந்த கிருமி நாசினியாகவும்,முதன்மையான நோய் எதிர்ப்பு காரணியாகவும் இருப்பதால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியா மற்றும் வேறு பல ஆசிய பகுதிகளில் விளைவித்து ஆயூர்வேத மருந்துகளில் முதன்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது..
வேப்பிலையை அதன் வடிவத்திலேயே பயன்படுத்தாமல் அதிலிருந்து தேநீரை தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் அதனை ஒரு மருந்தாக மட்டுமல்லாமல் ஒரு உணவாகவும் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நமது உடலானது ஏராளமான நோய் எதிர்ப்பு சக்திகளை பெறுகிறது.
வேம்பு தேநீர் அல்லது 'வேப்பிலை டீ'தயாரிப்பது அதன் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கும் ஒரு வழியாகும்.
வேப்பம்பூ டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் மினரல்கள் , செரிமானத்திற்கும், வயிற்று வலியைப் போக்கவும்,
சரும நிறத்தை மேம்படுத்தவும், காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, எனவே எடை குறைப்பதில் சிக்கல் இருந்தால், இது உங்களுக்கு சரியான பானமாக இருக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கிறது.
வேம்பு தேநீரை பருகுவதன் மூலம் பரம்பரை வழி புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் உதவுகிறது.
வேப்பம் பூவில் இருக்கும் அதிகமான கால்சியம் மற்றும் மினரல்கள் நம் உடலின் எலும்புகளையும் எலும்பு மூட்டுகளையும் வலிமையாக்க உதவுகின்றன. இவற்றில் இருக்கும் அதிகப்படியான ஆக்ஸிஜனேற்ற காரணிகள் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
மேலும், வேப்பம் பூவில் உள்ள கிருமி நாசினி தன்மை நம் உடலை புறக்கிருமிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. வேப்பம்பூ தேனீரானது காய்ச்சலை குணப்படுத்த ஒரு சிறந்த கை வைத்தியமாகும். மேலும் இது மலேரியா டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவற்றிற்கு முதல் உதவி மருந்தாகவும் பயன்படுகிறது.
இத்தகைய அளப்பறிய மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ள வேம்பு தேநீரை 'தேவர்களின் அமுதம்' என்று தினந்தோறும் காலையில் இது குடித்துவர ஆரோக்கியம் உங்கள் வசமாகும்.