முதன் முதலில்.. நெல்லில் குழந்தைகளை எழுதச்சொல்வது இதனால் தானா.?! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் முதல் முதலாக கல்வி கற்க துவங்கும் போது அவர்களை அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்லும் ஒரு பாரம்பரிய பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கல்வியின் கடவுளான சரஸ்வதி தேவிக்கு  மரியாதை செய்யும் வகையில் இந்த வழக்கம் தொடர்கிறது. அதன் முக்கியத்துவத்தை பார்ப்போம்.

குழந்தைகள் முதல் முதலாக பள்ளியில் சேரும் போது அவர்களை அரிசி அல்லது நெல்லில் எழுத வைக்கும் பழக்கம் நம் நாட்டின் எல்லா பள்ளிகளிலும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இந்த பழக்கம் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் நமது அண்டை நாடான வங்கதேசத்தில் இந்தப் பழக்கம் 'ஹாடே கோரி' என்று வழங்கப்படுகிறது.

கல்வி என்பது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் அடிப்படையான விஷயமாகும். கல்வியின் தேடலே ஞானத்தின் தேடல். அதனால் குழந்தைகள் கல்வி கற்கும் போது குரு மற்றும் சரஸ்வதி தேவியினுடைய ஆசியையும் அருளையும் பெற வேண்டும் என அவர்களை அரிசி மற்றும் நெல்லின் மூலம் எழுத வைக்கும் பழக்கம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கல்வியின் கடவுளாக பார்க்கப்படும் சரஸ்வதி தேவியின் விஜயதசமி தினமன்றே பெரும்பாலான குழந்தைகளை கல்வி கற்க சேர்ப்பதையும் நாம் பார்த்திருக்கின்றோம். எழுத கற்றுக்கொள்வது மற்றும் ஓங்காரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை குழந்தைகளும் கற்றுக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு அரிசி அல்லது நெல்லில் எழுத பழக்கப்படுத்தும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why ask children to write on rice or paddy first


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->