நெடுஞ்சாலைகளில் செவ்வரளி செடி வளர்க்கப்பட இது தான் காரணமா? விஷயம் கேள்விப்பட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!!
why sevvarali plated on highway
அரளி குடும்பத்தை சேர்ந்த மிகவும் நச்சுத்தன்மை கொண்ட தவற வகையாகும். நாம் எப்பொழுதும் இந்த நச்சுத்தன்மை கொண்ட தாவரங்களை ஒதுக்கித்தான் வைத்திருப்போம். ஆனால், இந்த செவ்வரளியை மட்டும் அவ்வாறு ஒதுக்குவதில்லை ஏன் தெரியுமா?
நீளமான இலைகளை கொண்டு அழகாக காட்சியளிக்கும் இந்த செவ்வரளி கோயில்களில் தெய்வங்களுக்கு மாலையாகப் பயன்படுத்தபடுவதும் உண்டு. மேலும், கோவில்களில் அநேக இடங்களில் இதனை பார்க்க முடியும். சிவத்தலங்களில் ஸ்தல மரமாக இருப்பதும் இவைதான்.
செடியின் விஷத்தன்மை காரணமாக யாரும் வீடுகளில் வளர்ப்பதில்லை. ஆனால், ஆன்மிகத்தில் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய விஷத்தன்மை கொண்ட செடிகளை எதற்காக நெடுஞ்சாலைகளில் வைத்திருக்க வேண்டும் என்பது நமக்கு சந்தேகமாகவே உள்ளன.
அதற்கான உண்மை காரணம் யாருக்கும், தெரிவதில்லை. செவ்வரளியின் இலைகள், தண்டுகள் எனப் பல பாகங்கள் விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், மலர்கள் மருத்துவக் குணம் கொண்டவை. நெடுஞ்சாலைகளில் சாலைகளுக்கு நடுவே பல வண்ணச் செடிகள் வைக்கப்பட்டாலும், அவற்றில் பூக்கும் காலங்களில் வண்ணமயமாகக் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கும்.
நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுகள் அதிகமாக இருக்கும். இந்த நச்சுவாயு, காற்றை அசுத்தமாக்குவதுடன், சாலையில் பயணிப்போருக்கும் சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அதனால்தான் இதன் இலைகள் பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கறுப்பு நிறமாகவும் மாறி இருக்கும்.
செவ்வரளியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் காற்றிலிருந்து கார்பன் துகள்களை நீக்கி மாசுகளை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை. இதனால் பயணிகள்1 நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். இதனால் தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
செவ்வரளி வறட்சியையும், மண் அரிப்பையும் தாங்கும் தன்மை கொண்டவை. அத்துடன், வாகனங்கள் தரும் இரைச்சலையும் குறைத்து, சத்தத்தைக் குறைக்கவும். எதிர்ப்புறம் உள்ள சாலைகளில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எதிர்வரும் வாகன ஓட்டிகளின்மீது படாமலும் தடுக்கின்றன. அந்த அளவுக்கு இலைகள் அடர்த்தி மிக்கவை. மேலும் இவற்றைப் பராமரிக்கும் செலவுகளும் குறைவாகத்தான் இருக்கும்.
விலங்குகள் இயற்கையாகவே இந்தத் தாவரத்தின் இலைகளை உண்ணாது எனவே, அதனால் விலங்குகள் பாதிப்பிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். அழகோடு சேர்த்து இத்தனை வசதிகளும் இருப்பதால்தான் நிறைய நெடுஞ்சாலைகளில் இதைக் காணமுடிகிறது.
செவ்வரளி எல்லா பருவ நிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்கூடியது. செவ்வரளிச் செடியின் மலர்கள், அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டவை. வீடுகளில் குழந்தைகள் தொடாத இடங்களிலும், தோட்டங்களிலும் அரளிச் செடிகளை வளர்க்கப்பட்டு வரப்படுகின்றன. காற்றுமாசு நீங்கி, சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்.
சமீப காலமாக செவ்வரளிச் செடிகளை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். செவ்வரளிப் பூக்கள் மலர்ச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனையாவதுதான் முக்கியமான காரணம். இவை அதிக காலம் நிலைத்து நின்று வளரக்கூடியவை.
English Summary
why sevvarali plated on highway