ஆண்டிபட்டி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கோலாகலம்!
Andipatti Sri Veera Anjaneya Temple Chithirai Pongal Festival
ஆண்டிபட்டி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சித்திரை பொங்கல் திருவிழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் 62 வது ஆண்டு பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த விழாவில் கடந்த 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருமஞ்சனகுடம் அழைத்து வந்து வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், விசேஷ பூஜைகளும் நடைபெற்றது .அதனை தொடர்ந்து அன்று இரவு மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து கோவில் முன்பாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து மாலை மேளதாளம் முழங்க ராமன், லட்சுமணன், அனுமன் வேசமிட்ட பக்தர்கள் வழிகாட்டுதலின்படி ,பக்தர்கள் பெரிய அலகுகள் குத்தி காவடி எடுத்தும், தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து ஆண்டிபட்டியில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வந்து, அனைத்து கோவில்களிலும் வழிபாடு நடத்தி ,இரவு ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதனை அடுத்து ஆஞ்சநேயர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் .
English Summary
Andipatti Sri Veera Anjaneya Temple Chithirai Pongal Festival