தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பலி - இதயத்தை உலுக்குவதாக கார்கே இரங்கல்!
10 children killed in fire accident kharge heart wrenching condolence
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ சில நிமிடங்களிலேயே மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வேகமாக தீயை அணைக்க முயன்றனர். இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்திற்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நிவாரணம் அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மருத்துவக் கல்லூரி விபத்தில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த இதயத்தை உலுக்கும் விபத்தில் உயிரிழந்த அனைத்து குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை இறைவன் தருவானாக.
இந்த விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து, இதுபோன்ற அலட்சியத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
10 children killed in fire accident kharge heart wrenching condolence