பாரதம் என்றால் என்ன? - ஆளுநர் ஆர்.என்.ரவி அடுக்கடுக்கான விளக்கம்!
What is bharat governor rn ravi explanation in layers
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், கல்வி முறையில் இன்று நாம் பாரதம் என்றால் என்ன என்று நம் குழந்தைகளுக்கு சொல்வது இல்லை என்றும், இந்தியாவைதான் சொல்லி தருகிறோம் என்று கூறிய அவர், பாரதம் என்பது இந்தியாவை விட பெரியது என்றும், பாரதம் இந்தியாவை விட பழமையானது என்று தெரிவித்தார்.
மேலும், ஒரு மரத்தின் இரு இலைகள் ஒன்று போல் இருப்பது இல்லை என்றும், ஆனால் அது வேறு வேறானவை அல்ல என்று கூறிய அவர், அது போல பாரதம் என்பது பிரிக்க முடியாதது என்றும், பாரதம் என்பது மதத்தின் அடிப்படையிலானது இல்லை. அது தர்மத்தின் அடிப்படையிலானது என்று கூறினார்.
ஒவ்வொரு மதங்களும் வெவ்வேறு கூறுகள் கொண்டவை என்றும், தர்மம் தான் அனைத்தையும் இணைப்பது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பாரதம் என்றால் சாதி, மதம் இல்லை என்றும், பாரதம் என்பது தார்மீக தர்ம நாடு என்றும், நாம் எல்லாம் ஒரே குடும்பம் என்பதே பாரதம் என்று தெரிவித்தார்.
English Summary
What is bharat governor rn ravi explanation in layers