ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிரான மனு!... உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதி மறுத்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம்  மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என்று கூறி ஸ்டெர்லை ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி, வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில்  சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.  இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதில், உச்ச நீதிமன்ற விதிகள் 2013-ன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, சீராய்வு செய்வதற்கு என வேறு வழக்கு எதுவும் இல்லை என்றும், அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petition against closure of sterlite plant supreme court action decision


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->