விருதுநகர்: போலீசாரை அடித்து, உதைத்த கும்பல்! அதிர்ச்சி வீடியோ! ஆறு பேர் கைது! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே போலீசார் மீது சரமாரியாக சரமாரியாக தா ஒரு கும்பல் ஒன்று தாக்கிய சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் பிரதான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் புகுந்த மருத்துவரை தாக்கிய சம்பவம், பெண் போக்குவரத்துக் காவலர் மீது தாக்குதல் நடத்தியது, தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் என தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்று, அண்மையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் முதல், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வரை திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் டாஸ்மார்க் அருகே உள்ள பாரில்,  போலீசாரை சரமாரியாக ஒரு கும்பல் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

புகார் தொடர்பாக வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றபோது, குடிபோதையில் இருந்த அந்த கும்பல் காவலர்களை அடித்து உதைத்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மற்றும் அந்த கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கிய நிலையில், போலீசாரை தாக்கிய கீழ பால்பாண்டி (வயது 31), கிளிராஜன் (வயது 24), பாஞ்சாலி ராஜா (வயது 40), பாண்டியராஜ் (வயது 22), சரவணகார்த்திக் (வயது 33), முத்துராஜ் (வயது 34) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viruthunagar police attacked case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->