சீன தாக்குதலுக்கு 10 பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழப்பு!...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்!
10 security guards killed in chinese attack salute to chief minister mk stalin
நாடு முழுவதும் இன்று வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில், கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி
ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து உயிர் தியாகம் செய்த இந்திய காவலர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி இன்று நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் காவலர்கள் நாடு முழுவதும் வீர வணக்க நாளை அனுசரித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், நாட்டின் எல்லையை இராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்.
தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!..அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
10 security guards killed in chinese attack salute to chief minister mk stalin