அடுத்த முதலமைச்சர் யார்?...பங்கு கேட்கும் கூட்டணி கட்சிகள்!
Who will be the next chief minister allies asking for share
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த நிலையில், 20-ம் தேதி பதிவான வாக்குகள் வாக்குச்சாவடிகளில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி 231 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழலில், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர், மகாயுதி கூட்டணியில் 3 முதல்வர் வேட்பாளர்கள் இருப்பதாக தகவல் வெளியானது. தேர்தல் முடிவிற்கு பின்னர், அஜித் பவார் தங்களுக்கு முதலமைச்சர் பதவி மீது நாட்டம் இல்லை என்றும், துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்று மறைமுகமாக பேசியுள்ளார்.
இதே போல் சிவசேனா ஷிண்டே பிரிவில், ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பாஜக இந்த தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் பட்னவிஸ்-க்கு முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கட்சிகளின் எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Who will be the next chief minister allies asking for share