பாஜக கூட்டணியில் உள்ள 38 கட்சிகள் எவை..? முழு லிஸ்ட் இதோ.!!
38 parties names in BJP alliance announced
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் இன்று மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ள 38 அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளன.
இந்த கூட்டத்தில் பங்கேற்கும் 38 கட்சிகளின் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி,
1) பாரதிய ஜனதா கட்சி.
2) ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா.
3) அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்.
4) ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி.
5) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
6) சோனிலால் தலைமையிலான அப்னா தள்.
7) தேசிய மக்கள் கட்சி.
8) தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி.
9) அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்.
10) சிக்கிம் கிராந்திகாரி மோர்ட்சா.
11) மிசோர் தேசிய முன்னணி.
12) திரிப்புராவின் பழங்குடியின மக்கள் முன்னணி.
13) நாகா மக்கள் முன்னணி, நாகாலாந்து.
14) அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சி.
15) அசோம் கன பரிஷத்.
16) பாட்டாளி மக்கள் கட்சி.
17) தமிழ் மாநில காங்கிரஸ்.
18) ஐக்கிய மக்கள் கட்சி.
19) சுஷில் தவே பாரதிய சமாஜ் கட்சி.
20) ஷிரோமணி அகில் தள்.
21) மகராஷ்டிரபதி கோமந்தக் கட்சி.
22) ஜன்நாயக் ஜனதா கட்சி.
23) பிரஹர் ஜனசக்தி கட்சி.
24) ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா
25) ஜன் சுரஜ்யா ஷக்தி கட்சி.
26) குகி மக்கள் கூட்டணி.
27) ஐக்கிய ஜனநாயக கட்சி, மேகாலயா.
28) மலைவாழ் மக்கள் ஜனநாயகக் கட்சி.
29) நிஷாத் கட்சி.
30) அனைத்திந்திய என்.ஆர் காங்கிரஸ்.
31) எச்.ஏ.எம்.
32) ஜனசேனா கட்சி.
33) ஹரியானா லோஹித் கட்சி.
34) பாரதிய தர்ம ஜன சேனா.
35) கேரள காமராஜர் காங்கிரஸ்.
36) புதிய தமிழகம்.
37) ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி.
38) கூர்கா தேசிய விடுதலை முன்னணி.
ஆகிய கட்சிகள் இன்று மாலை டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற உள்ளன.
English Summary
38 parties names in BJP alliance announced