ஆந்திரா: ஜெகன் மோகன் மேல் பந்தயம் கட்டிய ஒருவர் தற்கொலை!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடந்தது. சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயடுவின் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜன சேனா கூட்டணி 175 க்கு 164 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வராக உள்ளார். மேலும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

இந்நிலையில், மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் கிங் மேக்கராக உள்ள சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 12ம் தேதி 4வது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அமராவதியில் இந்த பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆந்திராவின் ஏலூர் மாவட்டம், தூர்ப்பு திகுபல்லி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் (52) என்பவர், அங்கு 7வது வார்டு உறுப்பினராக உள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். ஜெகன் மோகன் மீண்டும் முதல்வராவார் என்று கூறி பலரிடம் பந்தயம் கட்டியுள்ளார். 

 

ஆனால் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து மனமுடைந்த வேணுகோபால், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் முன்னதாக பந்தயம் கட்டியவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பந்தய பணத்தை கேட்டுள்ளதாக தெரிகிறது. 

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Man Died in Attempt Of Suicide in Andhra Due to YSR Congress Lose in Election


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->