மும்பை: சொகுசு கார் விபத்தில் முக்கிய கட்சிப் பிரமுகரின் மகன் கைது..!!
A Prominent Figure Son Arrested in Mumbai Luxury Car Accident
மும்பையின் வோர்லி பகுதியில் கடந்த ஜூலை 8ம் தேதி அதிகாலையில் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்றதில் விபத்து ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கார் ஓட்டிச் சென்ற மிஹிர் ஷா என்ற இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்த மிஹிர் ஷா ஒரு முக்கிய கட்சி பிரமுகரின் மகன் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை 7ம் தேதி இரவு வீட்டிற்கு அருகில் இருந்த மதுபான விடுதிக்கு பார்ட்டிக்கு சென்ற மிஹிர் ஷா, நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். இதற்கு அவர் தனது தந்தையின் பென்ஸ் காரை உபயோகப் படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஜூலை 8ம் தேதி அதிகாலை 4 மணியளவில் தனது பிஎம்டபுள்யூ காரை எடுத்துக் கொண்டு அபரிமிதமான போதையில் தனது டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத்துடன் மும்பை மரைன் டிரைவ் பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் மும்பை வோர்லி பகுதியில் அதிகாலை 5 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பிரதீப் மற்றும் காவேரி நக்வா ஆகியோர் மீது மோதியுள்ளார்.
இதில் அதிவேகத்தில் வந்த காரில் சிக்கிக் கொண்ட காவேரி நக்வா ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது மிஹிர் ஷா தான் காரை ஓட்டிக் கொண்டிருந்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு காரில் இருந்து இறங்கி தனது டிரைவரை காரை இயக்க சொல்லிவிட்டு, தான் எதிர் சீட்டில் அமர்ந்து வந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தனது தந்தையிடம் இந்த விபத்து குறித்து கூறிய மிஹிர் ஷாவை, சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக அவரது பென்ஸ் காரில் தப்ப வைத்துள்ளார் அவரது தந்தை. இதையடுத்து டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத் தற்போது சிறையில் உள்ளார். மேலும் மிஹிர் ஷா தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளதால் , கடந்த 2 நாட்களாக தலைமறைவாக இருந்த மிஹிர் ஷாவை 11 தனிப் படைகள் அமைத்து தேடி வந்த போலீசார் இன்று அவரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா, மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியான ஷிண்டேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
English Summary
A Prominent Figure Son Arrested in Mumbai Luxury Car Accident