வாங்கிய இரண்டு மணி நேரத்தில் தீப்பிடித்து எறிந்த பைக் - ராணிப்பேட்டையில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர் அடுத்த திமிரி பகுதியில் இருசக்கர வாகன ஷோரூமில் இருந்து நேற்று சூர்யா என்ற நபர் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் அதனை வீட்டிற்கு கொண்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், சூர்யா இருசக்கர வாகனத்தை வாங்கிய ஒரு மணி நேரத்தில் அதனை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயன்றார். அப்போது அந்த வாகனத்தில் இருந்து தீப்பொறி கிளம்பியுள்ளது.

பின்னர் சில நொடிகளில் இருசக்கர வாகனம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்ட சூர்யா, வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கிச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதிதாக வாங்கிய பைக் தீப்பற்றி எரிந்ததது ஏன்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new bike fire in ranipet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->