முதல்வர் ஸ்டாலின் ஒரே புன்னகையில் பெரியார், அண்ணா, கலைஞர் என 3 பேரையும் காட்டிவிட்டார் - சத்யராஜ்.!
Actor sathyraj wishes to CM MK Stalin
தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என் ரவி வாசிக்காமல் தவிர்த்தார். இதனை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்கியங்களையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் சத்யராஜ் நேற்றைய வீடியோ ஒன்றை வெளியிட்டியிருந்தார். அந்த வீடியோவை மனிதனுக்கு அழகு சிரிப்பு. சிரிப்பை விட அழகு புன்னகை. சமீபத்தில் ஒரு புன்னகை என்னை மிகவும் கவர்ந்தது. அது சட்டசபையில் நமது தமிழக முதலமைச்சர் மானமிகு மு க ஸ்டாலின் அவர்களின் புன்னகை.
அந்த புன்னகையில் பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் சுயமரியாதை புன்னகை சுடர் விட்டது. பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி கிளர்ந்து எழுந்தது. தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் வாழும் சாதாரண குடிமகனாக அந்த புன்னகையில் ஒரு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். காலரை தூக்கி விட்டு சொல்கிறேன் 'hats off to our cm' முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.
English Summary
Actor sathyraj wishes to CM MK Stalin