நடிகை கஸ்தூரி கைதா? முன்ஜாமீனா? நாளை மறுநாள் தீர்ப்பு!
Actress kasturi Bail case Chennai HC
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கிடையிலான நட்புறவை பாதிக்கும் வகையில், திட்டமிட்டு தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஸ்தூரி முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடந்தபோது, அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதாடியதாவது, அவர் பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைத்து, தெலுங்கு பேசும் மக்களின் மன உணர்ச்சியை பாதிக்கின்றது. அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என தெரிவித்தார்.
அதை எதிர்த்து கஸ்தூரியின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம், அவர் பேச்சில் யாருக்கும் ஆபத்தாக இல்லாத வகையில் சிலரையே குறிப்பிட்டார், எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
இதனையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான், அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும்” என்று கேள்வி எழுப்பி, வழக்கு தீர்ப்புக்காக நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
Actress kasturi Bail case Chennai HC