அதானியின் அடிமையாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின்! தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத அவசர நிலை! போராட்டத்தை அறிவித்த அறப்போர் இயக்கம்!
Adani Scam DMK MK Stalin Arapoor Iyakkam
அதானி ஊழல்கள் மீது நடவடிக்கை கோரி அறப்போர் இயக்கம் நடத்த இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து உள்ளதாகவும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்தாதான் செய்திக்குறிப்பில், "அதானி ஊழல்கள் மீது நடவடிக்கை கோரி வரும் ஜனவரி 5 வள்ளுவர் கோட்டத்தில் நடக்க இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளார்கள் அதானி ஏஜன்ட் போல் செயல்படும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் அருண் IPS.
அதிக பேர் போராட்டத்தில் பங்கெடுப்பார்கள் என்றும், அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று போராட்டத்திற்கு அனுமதி மறுத்து உள்ளார்கள். அதானி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கண்டு தொடை நடுங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த அரசு அரசியல் சாசனத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டு உள்ளது. அதே ஜனவரி 5 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்திற்கு பதிலாக அறப்போர் அலுவலகத்தில் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த அதானியின் அடிமைகளாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆணையர் அரூண் IPS ஐ கண்டித்து கண்டன கூட்டம் நடத்த உள்ளோம்! வாருங்கள்! தமிழ்நாட்டின் இந்த அறிவிக்கப்படாத அவசர நிலையை கண்டிப்போம்!
அதானியின் ஊழல்களை பாதுகாக்க வேலை செய்யும் அதானியின் அடிமைகளை கண்டிப்போம்" என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
English Summary
Adani Scam DMK MK Stalin Arapoor Iyakkam