த.வெ.க., தலைவர் விஜய்யை சந்தித்த ஆதவ் அர்ஜூனா; கட்சியில் இணையவுள்ளதாக தகவல் ..?
Adhav Arjuna met TVK leader Vijay
த.வெ.க., தலைவர் விஜய்யை, ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்து பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய அவர், விஜய் கட்சியில் அவர் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய்யின் த.வெ.க.,தொடங்கி ஒரு வருடம் ஆகா போகிறது. இந்நிலையில், கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.
தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் ஆட்சியில் சம பங்கு எனப் பேசியதைத் தொடர்ந்து, அவரது கருத்தை வி.சி.க.,வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா வரவேற்றார். கட்சித்தலைமையின் எண்ணத்துக்கு மாறாக, தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதனால், தி.மு.க., மற்றும் வி.சி.க., இடையே மோதல் சூழல் உருவானதை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் த.வெ.க.,வில் இணைய இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
த.வெ.க., கட்சியின் பனையூர் அலுவலகத்தில் இன்று விஜயை ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அவர் த.வெ.க.,வில் இணைய இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இது தொடர்பாக விஜய் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
த.வெ.க.,வின் தேர்தல் பணிகளை ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனத்திற்கு வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Adhav Arjuna met TVK leader Vijay