காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ராஜினாமா.!
adhir ranjan chowdhury resighn congrass leader post
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். தற்போது இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், ஆதர் ரஞ்சன் சவுத்ரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக காங்கிரஸ் மாநிலங்களை எம்.பி. சிதம்பரம் தலைமை செயலகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் 35 நிமிடங்கள் பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்கு அடுத்த நாள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முடிவை எடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன்பு இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மம்தா இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டது. சில விசயங்களில் மல்லிகார்ஜூன கார்கே கருத்திலும் வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
English Summary
adhir ranjan chowdhury resighn congrass leader post