200 தொகுதிகளில் இரட்டை இலை.. மாஸ் பிளான் போட்ட அதிமுக தலைமை.. வெடவெடத்த கூட்டணி கட்சிகள்..!
ADMK 2021 Assembly Election Plan 3 November 2020
தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் கூட்டணி அப்படியே நீடிக்குமா? அல்லது கூட்டணி கட்சிகளாக மாற்றங்கள் ஏதேனும் இருக்குமா? என்ற கேள்வியானது தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில், கூட்டணி என்ற பேச்சிற்கே இடம் கொடுக்க வாய்ப்பில்லாத முறையில், அதிமுக 200 தொகுதிகளில் களம்காணவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கூட்டணியில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகம் கேட்டு வரும் பாஜக மற்றும் பாமகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றலாமா? அல்லது அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கலாமா? என்ற எண்ணமும் எழுந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு அதிமுக பாஜக மற்றும் பாமகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற நினைத்தால், பிற கட்சியான தேமுதிக, த.மா.கா உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற செய்தியும் தெரியவருகிறது.
இதன் மூலமாக தேமுதிக மற்றும் த.மா.காவின் வீழ்ந்த ஓட்டுக்களை மீண்டும் உயர்த்தி ஆட்சியை கைப்பற்ற தலைமை ஆயத்தமாகி வருவதகவும் தெரியவரும் நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்துபோட்டியிட்டு 44 விழுக்காடு வாக்குகளை கைப்பற்றியது. அதிக பெரும்பான்மையாக 37 தொகுதிகளும் கைப்பற்றியது. கடந்த 2016 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலிலும் 41 விழுக்காடு வாக்குகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.
நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு வியூகத்துடன் கூட்டணி அமைந்திருந்தாலும், அதிமுகவுக்கு 18.5 விழுக்காடு ஓட்டுகள் கிடைத்தது. உள்ளாட்சி தேர்தலில் 80 விழுக்காடு தொகுதிகளில் போட்டியிட்டு, 33 விழுக்காடு இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 85 விழுக்காடு வெற்றியை கணக்கில் வைத்து, 200 தொகுதிகளில் களம்காண அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
தற்போதையை கூட்டணியை எடுத்துக்கொண்டால் வளர்ந்து வரும் பாஜக மொத்தமாக 60 தொகுதிகளை கேட்டு வருகிறது. இது மட்டுமல்லாது பாஜகவினரின் செயல்பாடுகள் முரணாக இருப்பதால், அதிமுக கூட்டணியை தொடரும் விவகாரத்தில் சற்று மறைமுக தயக்கம் காண்பித்து வருகிறது. பாமகவும் கிட்டத்தட்ட பாஜகவை போல தொகுதிகளை கேட்பதால், அதிமுக தலைமை இருவரையும் கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது அல்லது இருவரில் ஒருவரை வெளியேற்றுவது என்ற முடிவில் இருந்து வருகிறது.
இதில், பாமகவை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் தென்மாவட்டம் மற்றும் வடமாவட்டத்தில் அதிமுக ஆதரவு தலித் ஓட்டுகள் மற்றும் வடமாவட்டத்தில் மாற்று சமூக ஓட்டுகள், கொங்கு மண்டலத்தில் 45 தொகுதிகள், தென்மண்டலத்தில் 30 தொகுதிகள், டெல்டாவில் 10 தொகுதிகள் மற்றும் சென்னை சுற்றுவட்டாரத்தில் 15 தொகுதிகள் என கணக்கிட்டு வைத்துள்ளதாக தெரியவருகிறது.
ஆனால், அதிமுக தலைமையில் உள்ள மூத்த நிர்வாகிகளை பொறுத்த வரையில், பாமகவை எக்காரணம் கொண்டும் கூட்டணியில் இருந்து வெளியேற்ற கூடாது என்றும், அவர்கள் நமக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தெரிவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
ADMK 2021 Assembly Election Plan 3 November 2020