இரண்டும் இணைய 'வாய்ப்பே இல்லை'... டாக்டர். கிருஷ்ணசாமி திட்டவட்டம்!  - Seithipunal
Seithipunal


புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி அதிமுக-பாஜக இணைய வாய்ப்பே இல்லை என பேட்டியளித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, அரசியல் சூழலை முழுமையாக ஆய்வு செய்து கூட்டணி இறுதியாகும். கடந்த 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி இன்று இல்லை. 

புதிய தமிழகம் கட்சிக்கு, வருகின்ற மக்களவைத் தேர்தல் ஒரு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட உள்ளோம். கூட்டணி குறித்து முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. 

தற்போது புதிய தமிழகம் கட்சி தேர்தல் கள நிலவரங்களை ஆய்வு செய்து வருகிறது. தேர்தல் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட வெள்ளத்திற்கு உரிய நிதியை பெற அரசு போராடவில்லை. 

மாநில முதல்வர்கள் டெல்லியில் போராடும் நிலை ஏற்படுவது ஆரோக்கியமான போக்கு கிடையாது. மாநில அரசுக்கு உரிய நிதி வழங்காதது சர்வாதிகார போக்கு. நிதி பகிர்வில் வெளிப்படை தன்மை என்பது மிகவும் அவசியம். 

அதிமுக-பாஜக இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அதிமுக-பாஜக இடையே விரிசல் அதிகரித்து, வடதுருவம் தென்துருவம் போல் செயல்படுகிறது. 

இந்நிலையில் அதிமுக-பாஜக மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை. தேவேந்திர குல வேளாளர் மக்களை பா.ஜ.க ஏமாற்றிவிட்டது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK BJP no together Dr Krishnaswamy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->