கொலை மிரட்டல் வழக்கில் திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை! - Seithipunal
Seithipunal


கடந்த  22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த, திமுக கவுன்சிலர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரை, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2002-ஆம் ஆண்டு, அதிமுக பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் மீன்அங்காடி டெண்டர் விவகாரம் குறித்து விவாதித்தனர். 

இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையடைந்து, அதிமுக கவுன்சிலர்களான ஜீவரத்தினம், பரிமளா உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர்.  

இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீஸார் வழக்கு பதிந்து, தற்போதைய அமைச்சரை மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 மீது கொலை மிரட்டல் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், வழக்கு எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.  

வழக்கில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் கேள்விகள் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை சித்து உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK DMK Case dmk Minister Court judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->