நாங்க ஏன் டாஸ்மாக் திறந்தோம்ன்னா - ஆட்சியரின் அடேங்கப்பா விளக்கம்!
ADMK DMK govt TASMAC Nellai shop
திருநெல்வேலி மாவட்டம்: ராயகிரியில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றை திறந்தது.
இதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்ப்பு தெரிவிக்க அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. தற்போது திமுக ஆளும் கட்சியானதும் ராயகிரியில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையை திறந்துள்ளது.
திறக்கப்பட்டுள்ள அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து பிரபல ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படியில், தென்காசி மாவட்ட ஆட்சியர், ராயகிரி பகுதியில், 40 பேர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதால், விபரீதம் ஏற்படும் என, எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த அறிக்கையை ஆய்வு செய்து மீண்டும் அந்த பகுதியில் வேறு ஒரு இடத்தில் மதுக்கடையை மீண்டும் திறந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை சுட்டிக்காட்டி அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சாராயம் விற்க போட்டா போட்டி!
புதிய சாராயக்கடை திறக்க ஆட்சியர் ஒரு காரணம் சொல்லி இருக்கார் பாருங்க. அடேங்கப்பா!
அந்த பகுதியில் 40 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக செய்தி வந்ததாம். அடடே இதனால் மக்களுக்கு ஆபத்து (அரசுக்கு இழப்பு) வருமே என்று பதறிய ஆட்சியர் சாராயக்கடை திறக்க அனுமதி கொடுத்து விட்டாராம். அதாவது இனி உங்கள் பகுதியில் சாராயக்கடை வேண்டும் என்றால் கள்ளச்சாராயம் காய்ச்சுங்கள் என்று ஐடியா கொடுத்திருக்கிறார்.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் சமூக விரோதிகளுக்கும், டாஸ்மாக் சாராயம் விற்கும் திமுக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் இருவருமே போட்டி வியாபாரிகள் தான்" என்று விமர்சித்துள்ளது.
English Summary
ADMK DMK govt TASMAC Nellai shop