மாற்றம் ஒன்றே மாறாதது! திமுக மாறவில்லையா? பாஜகவுடன் கூட்டணி... எடப்பாடி பழனிச்சாமி சொன்னது என்ன?!
ADMK EPS BJP Alliance 2026 Election
நேற்று இரவு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்தித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, "எந்த கூட்டணியும் நிரந்தரமாக இருந்ததுண்டா? அரசியல் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப கூட்டணியிலும் மாற்றம் ஏற்படும். திமுக கூட கூட்டணி மாறவில்லையா?" என தெரிவித்தார்.
மேலும், "2019 தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பு பிப்ரவரியில் மட்டுமே வந்தது. அதுபோல, இந்த முறை தேர்தல் காலத்தில் மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்படும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பேசி கூட்டணி ஏற்படுத்தப்படும்" என்றார்.
அமித் ஷா - அ.தி.மு.க. கூட்டணி குறித்து அவர் என்ன கூறினார்?
"அமித் ஷா கூறியது அவருடைய கட்சியின் நிலைபாடாகும். ஆனால் அதிமுகவின் முடிவுகளை அதிமுக தான் எடுக்கும். கூட்டணி குறித்து முடிவாகச் சொல்லும் தருணத்தில், பத்திரிகையாளர்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். கவலைப்பட தேவையில்லை" என்றார்.
திமுகவை வீழ்த்துவதே குறிக்கோள்!
"எங்களின் ஒரே இலக்கு – திமுகவை தோற்கடிப்பது. அது தமிழக மக்களுக்கு எதிரான ஆட்சியாக செயல்படுகிறது. அதனை அகற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க அதிமுக தயார்" என உறுதியாக கூறினார்.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தெளிவாக அமையுமா? அல்லது புதிய அணி உருவாகுமா? என்பது இன்னும் சில நாட்களில் உறுதியாகிவிடும்.
English Summary
ADMK EPS BJP Alliance 2026 Election